[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

“உச்சநீதிமன்றம் அயோத்தி விஷயத்தை கேட்க மறுக்கிறது” - ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு

rss-chief-general-bhayaji-joshi-accused-the-supreme-court-of-ignoring-hindu-sentiments

அயோத்தி வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதாக ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். 

அயோத்தியில் ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது. 

இந்நிலையில், தானேவில் மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ் தேசிய நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதன் பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அயோத்தி வழக்கு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். 

நீதிமன்ற தீர்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருப்பதாகவும், தீபாவளிக்கு முன்னதாகவே நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை கேட்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்துள்ளதாகவும் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். 

இந்துக்களின் முக்கியமான பிரச்னை உச்சநீதிமன்றத்தின் முன்னுரிமை பட்டியலில் இல்லை என்பது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close