[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்

“யாரையும் சிறைக்கு அனுப்ப மீடூவை தொடங்கவில்லை” - பிரபல பாலிவுட் நடிகை

it-s-not-about-wanting-to-punish-says-aahana-kumra

உலகம் முழுவதும் மீடூ இயக்கம் பரபரப்புகளை கிளப்பிய நிலையில் லிப்ஷ்டிக் அண்டர் மை புர்கா திரைப்படத்தில் நடித்த அஹானா கும்ரா திரைப்படத்துறையின் தற்போதைய நிலை குறித்து பேசியுள்ளார். தனது குடும்ப பின்னணியில் இருந்து யாருமே திரைத்துறையில் இல்லாத போது பாலிவுட் திரைத்துறையில் தனக்கென ஒரு இடம் பிடித்து இருக்கும் அஹானா, பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இன்று நீங்கள் தைரியமான பெண்ணாக வலம் வருகிறீர்கள்? நீங்கள் சந்தித்த பிரச்னை என்ன? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?

“இன்று நான் முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆள். 5 வருடங்களுக்கு முன்பு நான் பாலிவுட் கலாசாரத்தின் குழப்பத்தில் இருந்தேன். என்னை தெளிவுபடுத்த யாருமே முன்வரவில்லை. அப்போதெல்லாம் நான் தற்கொலை எண்ணத்தின் விளிம்பிலேயே தான் இருப்பேன். நான் நானாக இருந்தால் வாழ முடியாது என்று தோன்றும்.  நான் யாராக வேண்டும்? எனது பெற்றோர் என்னை எப்படி பார்க்க ஆசைப்பட்டார்கள்? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொள்வேன். இப்படியான நேர்மறையான எண்ணங்களால்தான் நான் தெளிவுற்றேன்.”

என்னதான் நடந்தது?

“எனக்கு பிடித்த துறையில் சாதிக்கவே நான் எல்லாவற்றுக்கும் ஒத்துப்போக வேண்டும் என்று விரும்பினார்கள். நான் பலவற்றில் இருந்தும் விலகியே சென்றேன். இப்படியான் அணுகுமுறை என்னை முன்னேறவிடாது என்று எனக்கு தெரியும். என் அம்மா காவல் அதிகாரி என்பதால் கல்லூரி நாட்களில் என்னிடம் பேசவே பலரும் பயப்படுவார்கள். ஆனால் திரைத்துறைக்கு வந்த பிறகு என் கொள்கை ஆட்டம் காண தொடங்கியது. நான் திரைத்துறைக்கு வந்த காலத்தில் என் நட்பு வட்டத்தில் இருந்த பலரையும் நான் விலக்கி வைத்துவிட்டேன். 

தற்போது அவர்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை. பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் எண்களை நான் அழித்துவிட்டேன். அவர்கள் என்னை தொடர்பு கொள்ளமுடியாதது போல் செய்துவிட்டேன். நான் சின்னத்திரையில் நடிக்க வந்தவள் இல்லை. ஆனாலும் நான் நடித்தேன். இவள் வேலைக்காக எதுவும் செய்வாள் என்ற பெயரை மட்டும் வாங்கி விடக்கூடாது என நான் எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன். நான் டிவியில் கபாடி போட்டியை தொகுத்து வழங்கி வருகிறேன். இந்த வேலைகள் எல்லாம் என் திட்டத்தில் இல்லாதவை.”


திரைத்துறையில் எந்தச் சூழ்நிலையில் தடம் மாறுகிறார்கள் என நினைக்கிறீர்கள்?

“நாம் அனைவருடனும் பார்ட்டிக்கு செல்கிறோம். அவர்களுடன் சேர்ந்து குடிக்கிறோம். அவர்களின் பொழுதுபோக்குகளின் நம்மை இணைத்துக்கொள்கிறோம். எல்லோரும் செய்வதால் இது சாதாரணம் என்று நாம் நம்புகிறோம். தேவையற்ற பேச்சு, தேவையற்ற நடவடிக்கைகள் என இருவருக்கும் இடையில் இடைவெளி தேவையில்லை என்ற நிலை வந்துவிடுகிறது. 
நான் இதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. 

எனது பெற்றோரிடம் நான் ஆலோசனை செய்கிறேன். நடிகையாக மாறிவிடுவது அத்தனை எளிதாக இல்லை. என் அம்மா என்னை சின்னத்திரையில் நடிக்கக்கூறினார். திறமை இருந்தால் அதை யாராலும் ஒளித்துவைக்க முடியாது. ஒரு நல்ல நடிகர் எந்தத்துறையிலும் சாதிப்பார். வேலையை நேசித்தால் போதும், என் மனதுக்கு பிடித்த வேலையை நான் தினமும் செய்தாலே போதுமென்று எனக்குள்ளே கூறிக்கொள்வேன். நம்மை நாம் நம்பினால் போதும் யாராலும் நம்மை விலக்கி வைக்க முடியாது.”

 

மீ டூ குறித்து...

“மீடூ இயக்கமானது யாரையும் தண்டிக்க வேண்டும், சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டது இல்லை. இனி யாரும் தவறாக யோசிக்க அச்சப்பட வேண்டும் என்று தொடங்கப்பட்டது. உண்மை எப்படியும் வெளிவரும் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும். அதற்கு இந்த மீ டூ உதவும். எல்லாரையும் நாம் குறைக்கூற முடியாது. நம்முடைய செயல்பாடுகளை பொறுத்தே பலரின் செயல்பாடுகள் எதிரொலிக்கின்றனர்.”

திரைத்துறைக்கு புதிதாக வருபவர்களுக்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்?

“நான் திரைத்துறைக்கு புதிதாக வந்த நேரத்தில் ஒரு பெரிய இயக்குநர் என்னை கவர்ச்சியான உடையில் வரச்சொன்னார். படத்தின் கதாபாத்திரம் கவர்ச்சியானது என்று நினைத்தேன். ஆனால் அவரது எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. அப்போதே நான் அவரை தவிர்த்துவிட்டேன். நல்ல வேளையாக அந்த இயக்குநர் இப்போது சினிமா துறையிலேயே இல்லை. நடிகைகளின் திறமைகளை அவர்களது வயது, தோற்றத்தின் மூலமே பலரும் கணக்கிடுகின்றனர். 

திரைத்துறையில் யாரையாவது சந்திக்கச் சென்றால் ஒருவர் துணையுடனே நாம் செல்ல வேண்டும். இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தேவையற்ற தகவல்களை பரிமாறுவது, தேவையில்லாமல் தொடுவது போன்ற செயல்களை கவனியுங்கள். அது உங்களுடம் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பதின் நோக்கம் இல்லாததால் நடப்பவை. அது போன்ற செயல்பாடுகளை நாம் விலக்கி வைக்க வேண்டும்.” என்கிறார் அஹானா.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close