[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

மகாராஷ்டிராவில் 26 ஆண்டுகளுக்கு பின் மாணவர் சங்கத் தேர்தல்...!

student-politics-makes-a-comeback-on-maharashtra-campuses-after-26-years

மகாராஷ்டிராவில் 26 ஆண்டுகளுக்கு பின் பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழங்களில் நடைபெறும் மாணவர் சங்கத் தேர்தல்களுக்கு தடை செய்யப்பட்டது.  மாணவர் ஆர்வலரான ஓவன் டி சூஸா கொலை செய்யப்பட்டதையடுத்து மகாராஷ்டிரா அரசு இந்த கடும் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தற்போது 26 ஆண்டுகளுக்கு பின் மகாராஷ்டிரா பல்கலைக்கழங்களில் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாநில அரசின் இந்த முடிவை மாணவர்கள் மனதார வரவேற்றுள்ளனர்.

மாநில கல்வி அமைச்சர் வினோத் தவாட் இதுபற்றி கூறும்போது, “ 26 ஆண்டுகளுக்கு பின் அடுத்த கல்வியாண்டில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்” என்றார்.

தேர்தலில் மாணவர்களின் போட்டியிட வேண்டுமென்றால் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மறுதேர்வுக்கு காத்திருப்பவர்கள் போட்டியிட முடியாது. 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தேர்தலுக்கான பரப்புரையின்போது யாரையும் கடுமையாக தாக்கி பேசக்கூடாது. அரசியல் குறுக்கீடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைவர் உள்ளிட்ட 4 பதவிக்கு மாணவர்கள் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி அளவிலான தேர்தலுக்கு பின் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close