[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

ரஃபேல் விமான விலை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

give-rafale-deal-price-details-in-10-days-sc-to-government

ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்த விவரங்களை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், இத்துறையில் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதாகவும் கூறி தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்த விவரங்களை 10 நாட்களுக்குள் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Read Also -> வடகிழக்குப் பருவமழை : தாமதம் ஏன் ?  

பொதுவெளியிலும் மனுதாரர்களிடமும் பகிர்ந்து கொள்ள கூடிய தகவல்களை வெளியிடுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான விவரத்தையும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான தகவல்களையும் வெளியிட உத்தரவி‌ட்டனர். மேலும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசிய தகவல்களை மனுதாரர்களிடம் அளிப்பது கட்டாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Read Also -> இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க ! 

முன்னதாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார். ஆனால் நீதிபதிகள் அதனை ஏற்கவில்லை. வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close