[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தண்டவாளத்தில் விரிசல்: விபத்தைத் தவிர்க்க 3 கி.மீ ஓடிய ’தங்க மனசுக்காரர்’

man-makes-3km-dash-to-avert-train-disaster

தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அறிந்த உடல்நலமில்லாத ஒருவர், பெரும் விபத்தை தவிர்க்க 3 கி.மீ ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம், கொரங்கிரபாடியை சேர்ந்தவர் கிருஷ்ணா பூஜாரி. வயது 53. கடந்த 3 மாதங்களாக இவருக்கு உடல் நலமில்லை. இதையடுத்து டாக்டர்கள், தினமும் வாக்கிங் சென்றால் சரியாகும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அங்குள்ள ரயில்வே டிராக் அருகே அவர் வாக்கிங் செல்வது வழக்கம். கடந்த சனிக்கிழமையும் அப்படித்தான் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத் தில் விரிசல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்தப் பகுதியில் இப்போது ரயில்கள் வரும் நேரமாச்சே என்று நினைத்தார். இதில் ரயில் வந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக நினைத்த அவர் தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் அருகில் உள்ள உடுப்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் சொல்ல ஓடினார்.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்த ஸ்டேஷனுக்கு ஓடி சென்று தகவலைச் சொன்னார். இதையடுத்து உடனடியாக செயல்பட்ட ரயில்வே அதிகாரி கள், அடுத்து வர இருந்த ரயில்களை முந்தைய ஸ்டேஷன்களிலேயே நிறுத்துமாறு கூறினார். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள், விரிசலை சரி செய்த பின் ரயில்கள் இயக்கப்பட்டன. 

இதுபற்றி அந்த ஸ்டேஷனின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சரியான நேரத்துக்கு பூஜாரி வந்து சொன்னார். அவரால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டிருக்கிறது. ஏனென்றால் இரண்டு பக்கம் இருந்தும் ரயில்கள் வருவதற்கு தயாராக இருந்தன’ என்றார். இதையடுத்து கிருஷ்ணாவை, அதிகாரிகள் பாராட்டினர். 


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close