[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஐபிஎஸ் மகனுக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் அப்பா: ஒரு நெகிழ்ச்சி கதை!

proud-constable-father-salutes-his-ips-son

எந்த பெற்றோரும் தன் மகன்/மகள் தங்களை விட உயரத்தைத் தொட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்காகத்தான் போராடுவார் கள். அப்படித்தான் கான்ஸ்டபிள் ஜனார்தன் சிங்கும் நினைத்தார். மகனுக்காக உழைப்பைக் கொடுத்தார். கல்வியைக் கொடுத்தார். அவர் நினைத்தபடியே ஐபிஎஸ் ஆகி அவருக்கே அதிகாரியாக வந்திருக்கிறார் அந்த மகன்!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகில் உள்ள விபுதிகந்த் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்தன் சிங். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்ட பிள். இந்த ஸ்டேஷனை உள்ளடக்கிய பகுதிக்கு கடந்த சனிக்கிழமை உயர் அதிகாரியாகப் பொறுப்பேற்றார், அனூப் குமார் சிங் ஐபிஎஸ். இவர், ஜனார்தன் சிங் மகன்! அவருக்கு சல்யூட் அடித்து தனது கடமையை செய்துள்ளார் ஜனார்தன் சிங். இது சினிமா காட்சி போல நெகிழ்ச்சியாக இருந்தது. 

அனுாப் குமார் சிங், 2014ல் நடந்த ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானவர். சனிக்கிழமை முதல் லக்னோ நகர எஸ்.பி. ஆக அவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தன் தந்தையை அவர் சந்தித்தார். அப்போது, கடமைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அனுாப் குமாருக்கு, 'சல்யூட்' அடித்து அவரது தந்தை வரவேற்றார். 

இதுபற்றி அனுாப் குமார் கூறும்போது, ’என் அப்பா கடுமையான உழைப்பாளி. என்னையும், என் தங்கை மதுவையும் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றது இன்னும் ஞாபகத்துக்கு வருகிறது. எவ்வளவுதான் பண கஷ்டம் வந்தாலும் என் படிப்புக்கு எந்த குறையும் வைக்கவில்லை. சரியான நேரத்தில் ஸ்கூல் பீஸ் கட்டிவிடுவார். தேவையான புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிக்கொடுத்துவிடுவார். பணி காரணமாக வேறு இடங்களுக்கு மாதக் கணக்காக அவர் சென்றாலும் எங்கள் படிப்பு பற்றி விசாரித்துக்கொண்டே இருப்பார். ளில் பணிக்கு செல்லும்போதும், எங்கள் படிப்பு குறித்து விசாரிப்பார். அவரது முயற்சியால், ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியாகி உள்ளேன்’ என்றார். 

ஜனார்தன் சிங் கூறும்போது, ''எனக்கு கடமைதான் முக்கியம். அதற்குத்தான் முக்கியத்துவம். எங்கள் இருவர் இடையிலான உறவு பணியை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்,'' என்றார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close