[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

பட்டாசு வெடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுமா?: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

crackers-case-hearing-in-supreme-court

பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் என்ற அவகாசத்தை தளர்த்தக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் தமிழக அரசு சார்பில் ‌நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க இரவு 2 மணிநேரம் மட்டும் அனுமதி என்ற உத்தரவில் திருத்தம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இரவில் வெடிப்பது வடமாநிலத்தவர் வழக்கம் என்றும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்க கூடுதலாக அவகாசம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தமிழர்களின் கலாசாரம் சார்ந்த விஷயம் என்றும், கலாசாரத்திற்கு மதிப்பளித்து, காலையில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கும் வகையில் தீர்ப்பில் திருத்தம் தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பசுமைப்பட்டாசுகள் என்றால் என்ன? அதன் கூட்டுப்பொருட்கள் என்ன? பசுமைப்பட்டாசுகளுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உத்தரவால், எல்லோரும் ஒரே நேரத்தில் பட்டாசு வெடித்தால் அந்நேரத்தில் மாசு அதிகரிக்கும் என்றும் பட்டாசு உரிமையாளர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனுடன் தமிழக அரசின் மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close