[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

போலீசார் முன்பு உடைகளை களைந்து ரகளை செய்த போதை மாடல்!

drunk-woman-strips-in-front-of-police

போலீசார் முன்பு ஆடையை களைந்து ரகளையில் ஈடுபட்ட மாடலால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை அந்தேரி லோகண்ட்வாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 15 மாடியில் உள்ள ஒரு வீட்டில், பேயிங் கெஸ்டாக வசிக்கிறார் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாடலிங் செய்து வந்த இவர், ஸ்கிரிப்ட் டைரட்டராகவும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 25- ஆம் தேதி நள்ளிரவு தனது பிளாட்டில் மது அருந்திய சுதா, செக்யூரிட்டி அலோக் என்பவரை  இண்டர்காமில் அழைத்து சிகரெட் பாக்கெட் வாங்கிவரும்படி கூறியுள்ளார். 

இந்த நேரத்துக்குப் போய் வாங்கிவர முடியாது என்று கூறியுள்ளார் அலோக். இதனால் அவரை போனில் திட்டிய சுதா, பின்னர் வீட்டில் இருந்து கீழே வந்தார். செக்யூரிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடுமையாகத் திட்டினார். பின்னர் அவரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். பின்னர் அவரே போலீசுக்கு போன் செய்து தன்னை செக்யூரிட்டி தாக்கியதாகக் கூறினார். போலீசார் வந்தனர். மாடல் தன்னை தாக்கிய சிசிடிவி காட்சிகளை செக்யூரிட்டி அவர்களிடம் காண்பித்தார். 

பின்னர் போலீசார் சுதாவை ஸ்டேஷனுக்கு வந்து புகார் தரும்படி அழைத்தனர். முடியாது என்று கூறிய மாடல், ’பெண் போலீஸ் இல்லை, உங்களுடன் வரமுடியாது’ என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு பிரச்னை ஏற்பட்டது.

பின்னர் தனது வீட்டுக்குச் செல்வதற்காக லிப்ட் அருகே சென்றார். போலீசார் வீட்டுக்குச் செல்ல அவரை அனுமதிக்கவில்லை.இதையடுத்து அவர்கள் முன், தனது உடைகளை ஒவ்வொன்றாக கழற்றி ரகளையில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் ஒரு வழியாக போலீசார் மாடலை சமாதானப்படுத்தினர். அவர் காலையில் போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close