[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

supreme-court-likely-to-hear-ayodhya-case-from-today

அயோத்தி விவகாரம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அப்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப் பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த மனுக்களை ஆராய்ந்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில், மசூதி என்பது முஸ்லிம் மதத்தின் ஒரு அங்கம் அல்ல என தெரிவிக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முந்தைய தீர்ப்பு பொருந்தாது என தெரிவித்து, நிலத்தின் உரிமை குறித்து சிவில் அமர்வு அக்டோபர் 29-ஆம் தேதி முடிவு செய்யும் எனத் தெரிவித்தனர். அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்டு அமர்வு இன்று மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close