[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

தாயன்பும் கடமை உணர்வும்.. நெகிழ வைக்கும் புகைப்படம்

picture-of-the-day

கடமை உணர்வோடும், தாயன்போடும் இருக்கும் பெண் போலீஸ் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாட்டை காக்கும் பணிகளில் ஈடுபடும் பெண்களானாலும் வீட்டைக் காப்பதிலும் அவர்கள் தூண்களாகவே இருக்கின்றனர். வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ளும் பெண்கள் பணிகளிலும் கெட்டிக்காரர்களாகவே செயல்படுகின்றனர். தற்போது இணையத்தில் பெண் போலீசார் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், பெண் போலீசார் ஒருவர் தன் பணியை நாற்காலியில் அமர்ந்தபடி தன் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் அருகில் 1 வயதிற்கும் குறைவான அவரின் குழந்தை நிம்மதியாக தூங்குகிறது. இந்த படத்தை பார்க்கும் எவரும் அவ்வளவு எளிதில் இதனை கடந்து சென்றுவிடமாட்டார்கள். ஒருமுறைக்கு இருமுறை அதனை பார்ப்பார்கள். அந்தளவிற்கு நெஞ்சை நெகிழ வைக்கும் புகைப்படமாக இது உள்ளது. தேச உணர்வும், தாயுணர்வும் ஒரு சேர அமையப் பெற்ற புகைப்படம். தற்போது இந்த புகைப்படத்தை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close