[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

“பட்டாசு விவகாரத்தில் மேல்முறையீடு இல்லை” - மத்திய சுற்றுச்சூழல் துறை

no-appaeal-for-ordered-to-rules-for-crackers-in-india

நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை இல்லை என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு டெல்லி நகரம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல நாடு முழுவதும் விஸ்தரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுபடுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் ஆசோக் பூஷன் அமர்வு, நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் பட்டாசு விற்பனைக்கு சில நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. அதில் தீபாவளி அன்று இரவு 8 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கூறியது. 

இதனையடுத்து இந்தக் கட்டுப்பாட்டுக்கு எதிராக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டாசுக்குத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்புக்கு மத்திய அரசு மேல்முறையீடு செய்ய போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த உள்ளோம் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close