[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

“புகழுக்காக பாலியல் புகார் கூறவில்லை” - நடிகை டையன்ரா ஆதங்கம் 

if-i-wanted-publicity-i-would-have-taken-a-superstar-s-name-says-diandra-soares

மீ டூ மூலம் புகழ்தான் வேண்டுமென்றால் தான் ஏதேனும் சூப்பர் ஸ்டார் பெயரைத்தான் பயன்படுத்தி இருப்பேன். எதற்காக எழுத்தாளரான சுஹெல் சேத்தின் பெயரை பயன்படுத்த வேண்டும் என்று டையன்ரா சோயர்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்தாளர் சுஹெல் சேத்தின் மீது நடிகையும், மாடலுமான டையன்ரா சோயர்ஸ் மீ டூ மூலம் புகார் அளித்திருந்தார். இது குறித்து பேசியுள்ள அவர் ''எனது குற்றச்சாட்டுக்கு சுஹெல் அமைதி காப்பது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவர் ஏன் அமைதியாகவே இருக்கிறார் என்று எனக்கு தெரியும். இந்தக் குற்றச்சாட்டு அப்படியே நீர்த்துபோகும் என்று அவர் நினைக்கிறார். நான் சாகும்வரையிலும் இதை நீர்த்துப்போகவிடமாட்டேன். எனக்கு முன்னதாக இரண்டு பெண்கள் குற்றம் சுமத்தியிருக்கும் நிலையிலும் அவர் இன்னமும் அமைதியாக இருக்கிறார். ஆனால் இன்னமும் ஏன் சிலர் அவருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.

(டையன்ரா சோயர்ஸ்)

மேலும் ''நான் புகழுக்காகத்தான் மீ டூ புகார் தெரிவித்ததாக சில பெண்களே சொல்கிறார்கள். புகழுக்குத்தான் நான் மீ டூ  புகார் சொல்ல வேண்டுமென்றால் நான் ஏன் சுஹெல் பெயரை சொல்ல வேண்டும்? ஏதேனும் சூப்பர் ஸ்டார் பெயரை சொல்லலாமே. புகார் தெரிவித்த நாளில் இருந்து சரியான உணவின்றி தூக்கமின்றி இருக்கிறேன். புகழுக்காக யாரேனும் இப்படி கஷ்டப்படுவார்களா?'' என்றும் கேள்வி எழுப்பினார்.

(எழுத்தாளர் சுஹெல் சேத்)

சில வருடங்களுக்கு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த டையன்ரா சோயர்ஸ், ''வார கேளிக்கையின் போது நான் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். அங்கு நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. இதை ஆண் - பெண் பாலினத்திற்கு இடையேயான போட்டியாக பார்க்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை நிறைய ஆண் நண்பர்களும் எனக்கு ஆதரவும், பாதுகாப்பும் அளிக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் பதிவிடும் பாலிவுட் உலகத்தினர் இந்தப் பிரச்னையை ஏன் கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை. நிறைய ஆண்கள் மீ டூவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கும் பாலியல் ரீதியிலான பிரச்னைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close