[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதமர் மோடியின் மேக்அப் கலைஞருக்கு 15 லட்சம் சம்பளமா..?

pm-modi-hired-a-makeup-artist-at-15-lakh-rupees-a-month

பிரதமர் மோடி தனது மேக்அப் கலைஞருக்கு மட்டும் மாதம் 15 லட்சம் சம்பளம் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பெண் ஒருவர் மேக்அப் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து பிரதமர் மோடி தனது முகத்தை மேக்அப் செய்வதற்காக தனி ஆள் வைத்துள்ளார் என்றும் அவருக்கு மட்டும் மாதம் ரூபாய் 15 லட்சம் சம்பளம் வழங்கி வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த ஆதித்யா சதுர்வேதி என்பவரின் பதிவு கிட்டத்தட்ட 15,000-க்கும் அதிகமான ஷேர்களை தாண்டிச் சென்றது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது மேக்அப் கலைஞருக்கு மட்டும் மாதம் 15 லட்சம் சம்பளம் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது. உலக தலைவர்களின் மெழுகுசிலைகள் இடம்பெற்றுள்ள லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மெழுகு சிலை உள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த மெழுகு சிலை திறக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடியின் முக அமைப்பை அப்போது பெண் ஒருவர் அளவெடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் தவறான தகவலுடன் வேகமாக பரவி வருகிறது என்பது தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close