[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

அலோக் வர்மா வீட்டின் அருகே சுற்றித்திரிந்த அந்த நாலு பேர் யார்?

ib-admits-its-officers-were-outside-alok-vermas-home

சிபிஐ இயக்குநராக பணியாற்றிய அலோக் வர்மாவின் வீடானது மிக முக்கியமான பகுதியில் அமைந்துள்ளதால் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக ஐபி ஒப்புக்கொண்டுள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக பணியாற்றிய ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே அண்மைக் காலமாக பிரச்னை எழுந்தது. தொழிலதிபர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கை முடித்துத் தருவதற்கு அலோக் வர்மா 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா குற்றம்சாட்டியிருந்தார். அவர் மீது பதிலுக்கு அலோக் வர்மாவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். நாட்டின் மிகப் பெரிய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் உயர்பதவி வகிக்கும் இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இடையேயான பனிப்போரால் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவிற்கு சிபிஐ இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதேசமயம் அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதனிடையே அலோக் வர்மாவின் வீடு அமைந்துள்ள ஜன்பத் சாலை பகுதியில் இன்று காலை 4 பேர் சுற்றித் திரிந்ததாக கூறப்பட்டது.  இவர்கள் யார் என்று கேள்வி எழும்பிய நிலையில் அலோக் வர்மாவின் வீடானது மிக முக்கியமான பகுதியில் அமைந்துள்ளதால் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதாக ஐபி ஒப்புக்கொண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை கருதி இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஐபி வட்டாரம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக பதட்டமான சூழ்நிலையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது போலத்தான் இங்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள ஐபி வட்டாரம், ஆனால் வேவு பார்க்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. இருந்தாலும் அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ரகசியமாகவே இந்தப் பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனிடையே அலோக் வர்மா வீடு அருகே 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக கூறப்பட்டதை டெல்லி போலீஸ் துணை ஆணையர் மதூர் வெர்மா மறுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close