[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள்.. வழியிலேயே தடுத்து நிறுத்தப்படுவதால் பதற்றம்..!

women-forced-to-turn-back-at-sabrimala

சபரிமலையில் இன்று நடை திறக்கப்படும் நிலையில் சபரிமலைக்கு வரும் பெண்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம் பத்தனம்திட்டாவில் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடை திறக்கப்படுவதால், அனைத்து வயது பெண்களும் சபரிமலை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். ஆனால், 10 முதல் 55 வயது பெண்கள் கோயிலுக்குச் செல்வதை தடுக்கும் வகையில், நிலக்கல் பகுதியிலேயே போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து பெண்களை கீழிறங்கச் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

சபரிமலைக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர் லிபி என்பவர் பத்தனம்திட்டா பேருந்து நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். சபரிமலைக்கு செல்லும் மற்ற ஆண் பக்தர்கள் போலவே கருப்பு உடைகள் அணிந்து அவர் செல்ல முயற்சித்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார். கோயிலுக்கு புறப்படும் முன் தனது முகநூல் பக்கத்தில் ‘நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், காவல்துறை நம்முடன் துணை நிற்கிறது’என லிபி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஹைதராபாத்தை சேர்ந்த மாதவி என்ற 45 வயது பெண் ஒருவர் பம்பா-வை கடந்து சுவாமி ஐயப்பன் சாலையை அடைந்தபோது போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இதனிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுத்து நிறுத்த முயன்ற 15 பெண் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கும் விவகாரத்தில் போராட்டங்களை முடிவுக்குக்கொண்டுவர தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள், மற்றும் இந்து அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதனிடையே சபரிமலைக்குள் அனைத்துவயது பெண்களும் நுழைவதை தடுக்க அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஆன்டோ ஆண்டனி வலியுறுத்தியுள்ளார். ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து எரிமேலி உள்ளிட்ட பல்வேறு இடங்‌களில் போராட்டம் நடைபெற்றது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close