[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

பணியிடங்களில் பெண்களுக்கு துன்புறுத்தல்.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?

women-work-place-environment-what-is-the-rank-for-tn

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் 2013-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு மற்றும் குறைதீர் சட்டம் கொண்டு வரப்பட்டது. ‌இந்த சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் தமிழகம் நீங்கலாக நாடு முழுவதும் 2 ஆயிரத்து 535 வழக்குகள் பதிவாகியுள்ளன.

பெண்களும் வேலைக்கு சென்றால்தான் வீட்டின் குடும்ப வண்டி ஓடும் என்கிற நிலைமைதான் பெரும்பாலான வீடுகளில் காணப்படுகின்றன. சில குடும்பங்களில் பெண்கள் விருப்பப்பட்டு வேலைக்கு செல்கின்றனர். சில பெண்களோ குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கின்றனர். வெளியில் வேலைகளை முடித்துவிட்டு வந்தாலும் பெண்களுக்கு வீட்டு வேலைகளும் அதிகமாக இருக்கத்தான் செய்யும். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளை சமாளித்துதான் அவர்கள் ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர். அப்படியிருக்க பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இதனை வெளியில் சொல்ல முடியாமல் அவர்கள் சிலநேரங்களில் நொந்து போய்விடுகின்றனர். இப்படிப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் 2013-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு மற்றும் குறைதீர் சட்டம் கொண்டு வரப்பட்டது. ‌இந்த சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் தமிழகம் நீங்கலாக நாடு முழுவதும் 2 ஆயிரத்து 535 வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உத்தரப்பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 726 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து டெல்லி, ஹரியானா, மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த தகவல்கள் அடங்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுதவிர மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இந்த ஆண்டுக்கான ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் இந்த ஆண்டு மட்டும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக 533 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அறிக்கையிலும் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் அம்மாநிலத்தில் மட்டும் 231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுராவில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவொரு வழக்கும் பதிவாகவில்லை. அதேபோல் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் வழக்குகள் பதிவாவது வெகுவாக குறைந்துள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாடு 19-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 4 ஆயிரத்து ‌63 குற்றங்கள் நடந்துள்ளன.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close