[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

சபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்

verdict-will-be-implemented-pinarayi-vijayan

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இதை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் தீர்ப்பை எதிர்க்க மாட்டோம் என்றும் என்று கூறிவிட்டது.

கோயிலுக்கு வரும் பெண்களுக்கு போதிய வசதிகளும், பாதுகாப்பும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

ஆனால், அனைத்து வயது பெண்களையும் கோயிலில் அனுமதிக்கும் முடிவுக்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களும் கலந்துகொள்கிறார்கள்.

கேரள அரசின் முடிவுக்கு காங்கிரஸும், பாரதீய ஜனதாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின் றன. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யக் கோரியும் பாரதீய ஜனதா சார்பில் சபரிமலை ஆசார பாதுகாப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. இந் நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. 

இதற்கிடையே செய்தியாளர்களை இன்று சந்தித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவோம். அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும் எண்ணமில்லை. இந்த விவகாரத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொண்டு செயல் பட முடியாது. அப்படி யாராவது செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்’ என்றார். பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருந்தால், சுமூக தீர்வை எட்டலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close