[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

“அனைவரையும் சைவ உணவுக்கு மாற‌‌ உத்தரவிட முடியாது” - உச்சநீதிமன்றம்

we-cannot-order-everybody-to-be-a-vegetarian-says-supreme-court

நாட்டில் உள்ள அனைவரையும் சைவ உணவுக்கு மாற உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவில், இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இறைச்சிக்காக கால்நடைகள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதாகவும் இதற்கு அரசே ஆதரவளிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகூர், “நாட்டில் உள்ள அனைவரையும் சைவ உணவுக்கு மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களா?. நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சைவ உணவுக்கு மாறவேண்டுமென்று உத்தரவிட முடியாது” என்று கூறினார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், வழக்கை வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close