[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மக்களுக்கு சேவை செய்வதையே பாஜக பெருமையாக கருதுகிறது - பிரதமர் மோடி

pm-modi-in-speech-to-bjp-s-booth-level-workers

மக்களுக்கு சேவை செய்வதையே பாரதிய ஜனதா கட்சி பெருமையாகக் கருதுவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சட்டசபை தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் எனக்கருதப்படுவதால் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனையடுத்து பாஜக உறுப்பினர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக அக்கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி கொள்கை அளவில் ஏற்பட்டதல்ல என்றும், அவர்களின் இலக்கு தன்னைப் பதவியில் இருந்து இறக்குவதுதான் என்றும் குறிப்பிட்டார். மேலும் ''எதிர்க்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கூட்டணி அமைத்துள்ளனர். நாட்டின் நலனில் அவர்களுக்கு அக்கறை கிடையாது. பாரதிய ஜனதாக் கட்சி எந்த குடும்பத்தையும் சார்ந்தது அல்ல. கடுமையாகக் களப்பணியாற்றும் ஊழியர்களைப் பெற்றுள்ளதால் தனித்துவம் மிக்க கட்சியாக பாஜக விளங்குகிறது" என பெருமிதமாக தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர் தேர்தலில் வெற்றி பெறுவதை பாரதிய ஜனதா பெருமையாகக் கருதுவது இல்லை, எனினும் மக்களுக்கு சேவையாற்ற கிடைக்கும் வாய்ப்பை மகத்தானதாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close