[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

உலக அளவில் எதிரொலிக்கும் மீ டூ... அது என்ன மீ டூ?

a-special-story-about-metoo

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை "மீ டூ" என்ற ஹேஷ்டேக் மூலம் தற்போது தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். அது என்ன "மீ டூ"? எங்கு தொடங்கியது இந்த "மீ டூ"? 

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்காக 2006-ல் ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் சமூக செயற்பாட்டாளர் தரானா புர்க், நியூயார்க்கில் மீ டூ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்த மீ டூ, ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது 2017 அக்டோபர் 10-ம் தேதி தான். அப்போது ஹாலிவுட் சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்னஸ்டேய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார்களை முன் வைத்தனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமாகிய இந்த மீ டூ தற்போது இந்தியாவிலும் பிரபலமாகியுள்ளது. 

கடந்தாண்டு ராயா சர்கார் என்ற சட்டப்படிப்பு மாணவி கல்வி நிறுவனத்தில் அவருக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளைப் பட்டியலிட்டதில் இருந்து இந்தியாவில் மீ டு அறிமுகமானது. ஆனால், தற்போது இந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா பிரபல திரைப்பட இயக்குநர் நானா படேகர் மீது தெரிவித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து மீ டூ பிரபலமாகியுள்ளது. தனுஷ் ஸ்ரீ தத்தாவிற்கு ஏராளமான பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததால், அவரைத் தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பிரபலங்களும், பணியின் போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.

தமிழில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி-யும் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பேட்மின்டன் வீராங்கணை ஜுவாலா கட்டாவும் இதேபோன்று தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறியுள்ளார். பிரபல நடிகர் ஆலோக் நாத், மலையாள நடிகரும், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏவுமான முகேஷ் உள்ளிட்டோர் மீதும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடந்த பாலியல் தொல்லைகளை தற்போது கூறுவதன் நோக்கம் என்ன என்று பாரதிய ஜனதா எம்பி உதித் ராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அப்போது பாலியல் வன்முறைகளை வெளியே சொல்லும் சூழலும், தைரியமும் இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கு பதில் அளிக்கத் தவறவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மீதான வன்முறைகளைத் தைரியமாக தெரிவிக்க சமூக வலைதளங்கள் உதவிகரமாக இருப்பதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி எனவும் ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார். 

இந்த மீ டூ ஹாஷ் டேக் பாலியல் புகார் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் வரை நீண்டுள்ளது. பத்திரிகைத்துறையில் எம் ஜே அக்பர் பணியாற்றிய போது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் கூறும் பாலியல் புகார்களை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியும் வலியுறுத்தியுள்ளார். இப்படி, மீ டூ ஹாஷ்டேக் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலும், அதன் ஆதரவாளர்களின் கருத்துக்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஓங்கி ஒலித்து வருகின்றன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close