[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பல தடைகளை தாண்டிய பிந்து.. பிஹெச்டி கனவு நிறைவேறுமா..?

adivasi-woman-on-her-way-to-fulfill-phd-dreams

பல தடைகளை தாண்டி முதுகலை பட்டம்வரை முடித்தள்ள ஆதிவாசி சமூகத்தை சார்ந்த மாணவி ஒருவர் தற்போது உதவிகள் கிடைத்தால் தனது பிஹெச்டி படிப்பையும் முடித்துவிடும் எண்ணத்தில் உள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோட் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிந்து கண்ணன். ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர். ஒரு மலை சார்ந்த பகுதியில் இம்மாணவியின் வீடு உள்ளது. இங்கு சாலைவசதி, பேருந்து வசதி என எதுவும் கிடையாது. நடந்து செல்வதற்கே மிகவும் கஷ்டமான பகுதி தான். இப்படிப்பட்ட இடத்தில் இருந்து தனது விடா முயற்சி மற்றும் படிப்பின் மீது கொண்ட தீராத வெறியால் இன்று முதுகலை பட்டம் வரை படித்து முடித்துள்ளார் பிந்து. எம்.எஸ்.சி இயற்பியல் முதுகலை பட்டத்தை சென்னை ஐஐடியில் முடித்த இவர் தற்போது நெட் தேர்வின் முடிவுக்காகவும் காத்திருக்கிறார். அதேமசயம் யாராவது நிதி உதவி அளிக்க முன்வரும்பட்சத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் தன்னால் பிஹெச்டி படிப்பை முடித்துவிட முடியும் என நம்பிக்கையாக சொல்லும் பிந்து நிதி உதவிக்காக காத்திருக்கவும் செய்கிறார்.

பிந்துவின் குடும்பம் மிக வறுமையான பின்னணியை கொண்ட குடும்பமாகும். அவரின் அப்பா நோயால் அவதிப்படும் நிலையில் அம்மாவின் சொற்ப வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பம் இருக்கிறது. பிந்துவின் அண்ணன் மாற்றுத்திறானி. அதனால் அவருக்கும் வேலைக்கு சென்று சம்பாதிக்க முடியவில்லை. பிந்துவின் தம்பியும் குடும்ப வறுமையை கருத்தில்கொண்டு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். தற்போது நிதிஉதவி கிடைத்து பிஹெச்டி படிப்பை தான் முடிப்பதன் மூலம் தனது சமூகமும் பெருமையடையும் என பிந்து தெரிவித்துள்ளார்.

Courtesy: Manoramaonline

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close