[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

செல்போனுக்காக சண்டை: துப்பாக்கியால் சுட்டு மாணவன் தற்கொலை!

after-fight-with-sister-over-mobile-phone-delhi-teen-shoots-himself

செல்போனுக்காக அண்ணன் - தங்கைக்குள் நடந்த சண்டை தற்கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பிண்டாபூர் பகுதியில் உள்ள மடியாலா பகுதியில் வசிப்பவர் ரன்பீர் சிங். இவர் மகன் குல்‌ஷன் ஷெராவத். வயது 17. தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கும் சகோதரிக்கும் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக பிரச்னை. தினமும் இது தொடர் பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குல்ஷன் செல்போனை அடித்து உடைத்துவிட்டு வெளி யே சென்று விட்டான்.

நேற்று காலை வீடு திரும்பிய குல்‌ஷன், நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவனை தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குல்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்த னர். 

இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் அன்டோ அல்போன்சா கூறும்போது, ’காலையில் மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு தகவல் வந்த து. சென்று பார்த்தோம். சிறுவனின் தந்தை ரன்பீர் சிங் ‘குல்‌ஷன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான்’ என்று தெரிவித்தார். குல்ஷன் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியும், சட்டை பையில் இருந்த பயன்படுத்தப்படாத 4 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள் ளது’ என்றார்.

செல்போன் சண்டைக்காக நடந்த தற்கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close