[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 500 பெண் காவலர்கள்!

500-women-police-personnel-to-be-deployed-at-sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதற்கட்டமாக சுமார் 500 பெண் காவலர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக சபரிமலை தேவசம் போர்ட் தெரிவித்தது. இதனையடுத்து பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். 

இதனிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று பெண் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்ட் முடிவு செய்து, நவம்பர் மாதம் நடைபெறும் விழாவில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க தலா 30 பெண் காவலர்களை அனுப்பக்கோரி தமிழகம், புதுவை, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு கேரள அரசு தலைமை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் முதற்கட்டமாக சபரிமலை கோவிலில் பெண் போலீசார் 500 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கேரள காவல் துறை முடிவு செய்துள்ளது.

’ஐயப்பன் கோவிலில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க 500 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் பட உள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்தும் பெண் காவலர்களை வரவழைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகிறோம்’ என்று கேரள மாநில டி.ஜி.பி. லோக்நாத் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close