[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

பயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்!

driver-lets-monkey-get-behind-wheel-removed-from-duty

பயணிகள் பேருந்தை குரங்கிடம் ஓட்டுவதற்கு கொடுத்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தின் தேவநகரி பிரிவில் டிரைவராக பணியாற்றுபவர் பிரகாஷ். இவர் இந்த மாதம் 1 ஆம் தேதி தேவநகரியில் இருந்து பரமசாஹராவுக்கு செல்லும் பயணிகள் பேருந்தை ஓட்டிச் சென்றார். அப்போது இவர் இருக்கையின் முன் ஒரு குரங்கு இருக்கிறது. அதனிடம் ஸ்டீயரிங்கை கொடுத்து, அப்படி ஓட்டு, இப்படி ஓட்டு என்கிறார் பிரகாஷ். குரங்கும் அங்கும் இங்கும் ஸ்டீயரிங்கை இயக்குகிறது. இதைக் கண்ட பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பிடித்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த சில நாட்களாக வைர லாகி வருகிறது.ஆபத்தை உணராமல் பயணிகள் பேருந்தை குரங்கை வைத்து ஓட்ட செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பிரகாஷை பணியில் இருந்து சஸ்பென்ட் செய்துள்ளது. ‘இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம். விசாரணை முடியும் வரை அவர் பேருந்தை இயக்க முடியாது. இது ஏற்க முடியாத ஒன்று. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு அதிகாரி கூறும்போது, ‘அந்த ரூட்டில் தினமும் பேருந்தை இயக்குபவர் பிரகாஷ். அவர் விலங்குகளை விரும்புபவர். அந்த குரங்கை ஒரு குரங்காட்டி கொண்டு வந்துள்ளார். அப்போது அது தானாக வந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்துகொண்டது. விரட்டினாலும் போகவில் லை. பிறகு பயணிகள் முயற்சியால் அந்த குரங்கு வெளியேற்றப்பட்டது. இருந்தாலும் டிரைவர் குரங்கிடம் ஸ்டீயரிங்கை கொடுத்தது ஏற்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close