[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தீபக் மிஸ்ராவின் தீர்ப்புகளும், சர்ச்சைகளும்.

chief-justice-dipak-mishra-has-ruled-in-several-major-cases

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 13 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருந்த இவர், பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

ஒடிசாவில் 1953 அக்டோபர் 3 ஆம் தேதி பிறந்த தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்றத்தின் 45ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பதவியேற்றார் தீபக் மிஸ்ரா. பல வழக்குகளை தயக்கமின்றி கையாளும் விதம், வேகமான நிர்வாக முடிவுகள் என பரபரப்பாக செயல்பட்டார். தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார்.

அவற்றில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்ற தீர்ப்பு பெரிதாக பேசப்பட்டது. பெண்கள் ஆண்களுக்கு சமம் என்றும், பெண்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டக்கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். தன்பாலின உறவு குற்றமல்ல, வேறொருவர் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் முறையற்ற உறவு கிரிமினல் குற்றமல்ல என்ற பரபரப்பான தீர்ப்பையும் தீபஸ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது.

முறையற்ற உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார் தீபக் மிஸ்ரா. அயோத்தி தொடர்பான துணை வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கத் தேவையில்லை என்ற அதிரடித் தீர்ப்பையும் தீபக் மிஸ்ரா அமர்வு வழங்கியுள்ளது. நீண்ட காலமாக நடைபெற்ற ஆதார் அடையாள அட்டை அவசியமா? என்ற வழக்கிலும் தீபக் மிஸ்ரா தலைமையிலான தீர்ப்பு வழங்கியது. பான் அட்டை, வருமான வரி கணக்கு தாக்கல் ஆகியவற்றிற்கு ஆதார் கட்டாயம் என்ற தீர்ப்பை தீபக் மிஸ்ரா வழங்கியுள்ளார்.

உச்சநீதிமன்ற வழக்கு விசா‌ரணைகளை நேரலை செய்யலாம் என்ற தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார். காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக காவிரி ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டவரும் இவரே. அதிரடியாக பல தீர்ப்புகளை வழங்கிய தீபக் மிஸ்ரா, மூத்த நீதிபதிகளை கலந்து ஆலோசிப்பதில்லை , நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசை போதிய அளவு எதிர்க்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

வழக்குகளை விசாரணைக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் லோகூர் ஆகியோர் போர்க்கொடி தூக்கிய நிகழ்வும் அரங்கேறியது. பெரும்பாலும் சர்ச்சைகளும், சவால்களும் நிறைந்ததிருந்தாலும் பல நிறைவான தீர்ப்புகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்கியுள்ளார் என்பதை மறுக்க முடியாது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close