[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சிகிச்சை பெற்று வரும் கடற்படை அதிகாரியிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

pm-modi-enquires-about-well-being-of-naval-officer-abhilash-tomy

படகு பழுதானதால் நடுக்கடலில் உயிருக்குப் போராடிய இந்திய கடற்படை அதிகாரியிடம் பிரதமர் மோடி போனில் பேசி நலம் விசாரித்தார்.

உலகை கடல் வழி சுற்றிவரும் 'கோல்டன் குளோப்' எனப்படும் சர்வதேச படகுப் போட்டி பிரான்சில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது. 30 ஆயிரம் மைல் துாரத்தை தனி நபராக படகில் கடந்து வர வேண்டும் என்பது போட்டி. நவீனத் தொழில்நுட்பங்களை பயன் படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட போட்டி இது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர், அபிலாஷ் டோமி (39) கலந்து கொண்டார். இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். உள்நாட்டில் வடிவமைக் கப்பட்ட, 'துரியா' என்ற படகில் 84 நாட்களில் 10 ஆயிரத்து 500 மைல் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

 இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே தென் இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, கடலில் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் 14 அடி உயரத்துக்கும் எழுந்த அலைகள் காரணமாக அவர் சென்ற படகு சேதமடைந்தது. இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் இந்திய கடற்படைக்கு தகவல் அனுப்பினார்.

இதை அறிந்த ஆஸ்திரேலிய கடற்படையும் ரீயூனியன் தீவில் இருந்து வந்த பிரெஞ்ச் கப்பலான ஓஸ்ரிஸும் அவரை மீட்கும் நடவடிக் கையில் ஈடுபட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர்க்கப்பலும் விமானமும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ன. இந்நிலையில் அவர் முன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவருக்கு கப்பலில் இருந்த மருத்துவர்கள் குழு, முதலுதவி சிகிச்சை அளித்தது. பின் அங்கிருந்து அவரை படகு மூலம் நியூ ஆம்ஸ்டர்டம் என்ற சிறிய தீவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவம னையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலமாக உள்ளார். மேல் சிகிச்சைக்காக இன்று மொரிசியஸ் சென்று சேர்வார் என தெரிகிற து.

இதற்கிடையே நடுக்கடலில் ஏற்பட்ட மோசமான சீதோஷ்ணநிலையில் இருந்து தப்பியது எப்படி என்று அபிலாஷ் டோமி கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘கடல், நம்பமுடியாத அளவுக்கு கடுமையாக மாறிவிட்டது. நானும் எனது துரியா படகும் இயற்கைக்கு எதிராக போராடி னோம். கடலில் பயணம் செய்த அனுபவம் மற்றும் கடற்படையில் நான் பெற்ற பயிற்சியின் காரணமாகவே உயிர்தப்பினேன். இல்லை என்றால் கடினம். என்னை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் பிரதமர் மோடி போனில் பேசி நலம் விசாரித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், ‘அபிலாஷ் டோமி யி டம் பேசி நலம் விசாரித்தேன். ஒவ்வொரு இந்தியனும் அவர் விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறார்கள். அவரை மீட்ட மீட்புக் குழுவுக்கும் நன்றி சொன்னேன். அவர், கடற்படை படகு, ஐஎன்எஸ்வி தாரிணியுடன் வந்தபோது சந்தித்த நினைவுகள் பசுமையாக இருக்கின் றன’ என்று தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே அவர் ஓரளவு குணமானதும் இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close