[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

தன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அதிகாரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்!

selfless-irish-sailor-made-daring-bid-to-rescue-tomy

தனது காயம் பற்றி கவலைப்படாமல், படகு சேதமடைந்து முதுகில் காயத்துடன் நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை அதிகாரியை காப்பாற்ற முயன்றுள்ளார் அயர்லாந்து வீரர்.

உலகை கடல் வழி சுற்றிவரும் 'கோல்டன் குளோப்' எனப்படும் சர்வதேச படகுப் போட்டி நடந்து வருகிறது. பிரான்சில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி துவங்கிய இந்தப் போட்டியில், 30 ஆயிரம் மைல் துாரத்தை தனி நபராக படகில் கடந்து வர வேண்டும். நவீனத்  தொழில் நுட்பங்களை பயன் படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட போட்டிஇது.

இதில் பலர் பங்கேற்றுள்ளனர்.  இந்தியாவின் சார்பில் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர், அபிலாஷ் டோமி (39) கலந்து கொண்டார். இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'துரியா' என்ற படகில் 84 நாட்களில் 10 ஆயிரத்து 500 மைல் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே தென் இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, கடலில் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை மாற்றம் மற்றும் 14 அடி உயரத்துக்கும் எழுந்த அலைகள் காரணமாக அவர் சென்ற படகு சேதமடைந்தது. இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட் டது. படுகாயமடைந்ததில் இருந்து அவருக்கு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இதனால் கடல் தண்ணீரை குடித்து வந்துள்ளார். இதுபற்றி அவர் இந்திய கடற்படைக்கு தகவல் அனுப்பினார். 

இதுகுறித்து அறிந்த ஆஸ்திரேலிய கடற்படையும் ரீயூனியல் இருந்து வந்த பிரெஞ்ச் கப்பலான ஓஸ்ரிஸும் அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர்க்கப்பலும் விமானமும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட் டது. இந்நிலையில் அவர் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டார். அவருக்கு  கப்பலில் இருந்த மருத்துவர்கள் குழு, முதலுதவி சிகிச்சை அளித்தது. பின் அங்கிருந்து படகு மூலம் நியூ ஆம்ஸ்டர்டம் என்ற சிறிய தீவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இன்று மேல் சிகிச்சைக்காக மொரிஷியஸ் கொண்டு செல்லப்படுவார் எனத் தெரிகிறது.

(கிரேகோ மேக்குக்கின்)

இந்நிலையில் அபிலாஷ் டோமியோடு அந்தப் போட்டியில் பங்கேற்ற இன்னொரு வீரரும் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளார். அவர் அயர்லாந் தைச் சேர்ந்த கிரேகோ மேக்குக்கின் (32). கடலில் ஏற்பட்ட புயலில் அவரும் பாதிக்கப்பட்டாலும் அதுபற்றி, தகவல் எதையும் அவர் தெரிவிக்க வில்லை. ஆனால், டோமியின் படகு பாதிக்கப்பட்டதை அறிந்து அவருக்கு உதவ நினைத்து அவர் படகைத் தேடி வந்துள்ளார். அதற்குள் பிரெஞ் ச் கப்பல் அவரை மீட்டுவிட்டது. இதையடுத்து டோமியை மீட்ட பிரெஞ்ச் கப்பல் கிரேகோயும் மீட்டுள்ளது. 

‘அவசரகால மீட்புத் தேவை பற்றி கிரேகோ எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும் டோமிக்கு உதவ நினைத்து வந்துள்ளார். நாங்கள் டோமி யை மீட்ட பின் 30 மைல் தொலைவில் இருந்த கிரேகோயையும் மீட்டோம். இவருக்கு காயம் அதிகம் இல்லை. இருவரும் நலமாக உள்ளனர்’ என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close