[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடையில்லை: உச்சநீதிமன்றம்

mp-mla-s-can-work-as-lawyer-sc

எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகியும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எம்.எல்.சி.க்கள் ஆகியோர் தங்களது பணி காலத்தில் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் கடந்த ஜூலை 9ஆம் தேதி கடைசியாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடையில்லை என தெரிவித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கபில் சிபில், ப.சிதம்பரம், பாஜகவை சேர்ந்த மீனாக்ஷி லேகி உள்ளிட்டோர் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close