[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்

for-rafale-deal-probe-congress-to-knock-on-vigilance-commissions-door

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் சுயேச்சையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி இன்று மனு அளிக்க உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி குழுவினர் மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையரை இன்று சந்திக்க உள்ளனர்.

முன்னதாக இதே விவகாரத்தில் சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியையும் காங்கிரஸ் கட்சி குழுவினர் சந்தித்து இருந்தனர். ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறும் அவர்கள் கணக்கு தணிக்கை அதிகாரியை வலியுறுத்தியிருந்தனர்.

Read Also -> மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : தலைமைச் செயலாளர் உத்தரவு

Read Also -> ஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் !

இதற்கிடையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய ராணுவத்தில் ரஃபேல் போர் விமானத்தை பயன்படுத்த தலைமை கணக்குத் தணிக்கை துறையின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close