[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அறிவிப்பு

new-delhi-cancels-pak-india-foreign-ministers-meet-in-new-york

இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து எழுதிய கடிதத்தை அடுத்து‌ நியூயார்க்கில், ஐநா பொதுச்சபைக் கூட்டத்தின்போது இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்‌ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோபியானில் 3 போலீசார் கடத்திச் செல்லப்பட்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட நிலையில், இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும், காஷ்மீர் பயங்கரவாதி புர்ஹான் வானியை பாராட்டி பாகிஸ்தானில் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தான் தனது வழியை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இரு நாட்டு வெளியுறவு அமைச்சர் இடையே நியூயார்க்கில் நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை உறுதிபடுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close