[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

தேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி

pm-modi-said-about-india-on-2022

தேசத்தின் நலனுக்காக கடினமான முடிவுகளை எடுக்க அரசு ஒருபோதும் தயங்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய மோடி, “கடினமான எந்த முடிவையும் மேற்கொள்வதற்கு இந்த அரசு ஒருபோதும் தயங்காது. இதன் விளைவாக நாட்டின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே வங்கிகள் இணைப்பு நடவடிக்கையின்போது நிறைய விமர்சனங்களும், கண்டனங்களும் வந்தன. இப்போதும் 3 வங்கிகளை இணைக்கிறோம். ஆனால், நாடு வளர்ச்சியை முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பதால் அனைவரும் எதுவும் விமர்சிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள். உலகத்தரத்திலான சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் டெல்லியில் அமைய உள்ளது. ஐடி மற்றும் சில்லறை விற்பனை துறை‌களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டுக்குள், இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். 

முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பயணிகள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். சிலர், அவருடன் கைக்குலுக்கி மகிழ்ந்தனர்.

Read Also -> பாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை!

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close