[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பிக்பாஸ் வீட்டில் பிரச்னை செய்த ஸ்ரீசாந்த்

bigg-boss-12-too-early-for-sreesanth-to-be-a-rebel

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹிந்தியில் சீசன்12 ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டுள்ளார். இவர் எங்கே சென்றாலும் அவரை சுற்றி சர்சைகள் எழுவது வாடிக்கை போல. இவர் ஹிந்தியில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, அவருக்கும் சக போட்டியாளர் பெண் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. அப்போது ஸ்ரீசாந்த் கொஞ்சம் ஆவேசமாக நடந்து கொண்டதாக காட்சிகள் வெளியாகின. அதனால் அவரை சுற்றி சமாதானத்தில் சக ஆண் போட்டியாளர்கள் இறங்கினார்கள்.

ஆனாலும் ஸ்ரீசாந்த் சமாதானம் அடையவில்லை. அவர் பிக்பாஸ் இடம் முறையிடுவதாக வீடியோ முடிந்தது. இதனால் என்ன ஆனது? அவர் வெளியேற்றப்படுவாரா? என பரபரப்பு ஏற்பட்டது. இதை குறித்து பேசிய ஒரு சகபோட்டியார், “ஸ்ரீசாந்த் தன்னை உயர்வாக கருதிக் கொண்டு மற்றவர்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளர். 

இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், “2011ம் ஆண்டே நான் கலந்துகொள்ள வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. ஆனாலும் சேனல் உடன் நான் தொடர்பில் இருந்தேன். பிக்பாஸில் நடப்பது எல்லாம் உண்மை. அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என கூறியுள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close