[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

ஒரு நிமிடம் தலை சுற்றுதே..! - இது பெட்ரோல் விலையின் கதை

how-to-calculate-petrol-diesel-price

பெட்ரோல், டீசல் விலையின் கதை கச்சா எண்ணெய்யை வாங்குவதில் இருந்து தொடங்குகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை டாலரின் விலையில் வாங்க வேண்டும். அதனால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்பொழுதுமே பெட்ரோல், டீசல் விலையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரூ4961 மட்டும். ஒரு பேரல் என்பது 159 லிட்டர். அப்படியென்றால் ஒரு லிட்டரை நாம் வெறும் ரூ31.20 என்ற கணக்கிலேதான் வாங்குகிறோம். இங்கிருந்து ஒவ்வொன்றாய் வரி என்ற பெயரில் விலை எப்படியெல்லாம் உயர்கிறது என்று பார்த்தால் ஒரு நிமிடம் நமக்கே தலை சுற்றிவிடும். 

முதலில் கூடுவது Ocean Freight என்பதுதான். அதாவது எண்ணெய்யை நாம் கப்பலில் தானே கொண்டு வர முடியும். எண்ணெய்யை பேக் செய்து கப்பலின் மூலமாக இந்தியா வந்து சேருவதற்கு தான் இந்த விலை. இதனையும் சேர்த்து தான் நாம் கச்சா எண்ணெய் விலையை கணக்கிட வேண்டும். ஒரு பொருளை நாம் வாங்கினால் அது வீடு வந்து சேர்வதற்கு ஆகும் செலவைப் போல். அது சில டாலர்கள் இருக்கும். இதனையும் சேர்த்தால் ஒரு பேரல் சுமார் ரூ5700 என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை தோராயமாக ரூ35.89 இருக்கும்.

இந்தியா வந்து சேர்ந்த கச்சா எண்ணெய்யை அடுத்து சுத்திகரிப்பு செய்ய வேண்டும். கச்சா எண்ணெயை அப்படியே பயன்படுத்த முடியாது. அதனை சுத்திகரிப்பு செய்து உப பொருளான பெட்ரோல், டீசல், தார் போன்றவை பெறப்படுகிறது. இதற்கு ஆகும் செலவும் சேர்க்கப்படுகிறது. அந்த செலவும் அடிப்படை செலவுகளில் வந்துவிடும். அதாவது ஒரு பொருளை உருவாக்குவதில் வந்துவிடுகிறது. இந்த இடத்தில் பெட்ரோல் டீசலின் அடிப்படை விலையை நாம் உறுதி செய்யலாம். 

இதன் பிறகு மூன்று நிலைகளை கடந்துதான் பெட்ரோல், டீசல் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்படும். 

நிலை 1 : கலால் வரி ( மத்திய அரசு வரி ) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான செலவு மற்றும் போக்குவரத்து செல்வை ஈடு கட்டுவதற்காக கலால் வரி விதிக்கப்படுகிறது. 

நிலை 2 : டீலர் கமிஷன் ( முகவர் தரகு விலை) - வாங்குவதற்கும் விற்பதற்குமான விலையில் செய்யப்படும் மாற்றம்  ; ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ3 வரையில் டீலர் கமிஷன் இருக்கும் 

நிலை 3 : வாட் வரி - மதிப்பு கூட்டு வரி - மாநில அரசின் சார்பில் விதிக்கப்படும் வரி. மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.

இப்பொழுது எழுந்து வரும் கோரிக்கைகள் இரண்டு வகையில் உள்ளது. ஒன்று மத்திய அரசு சார்பில் விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்பது. மற்றொன்று மாநில அரசுகள் தங்களின் வாட் வரிகளை குறைக்க வேண்டும் என்பது.  

பெட்ரோல், டீசல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது

ஒரு எடுத்துக்காட்டிற்கு டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தினை நாம் பார்க்கலாம். ஏனென்றால் செப்டம்பர் நான்காம் தேதி கச்சா எண்ணெய் விலை ரூ5,085 என்ற அளவில் உச்சத்தில் இருந்தது.  

 

பெட்ரோல் விலை

டீசல் விலை

சர்வதேச விலையில் கச்சா எண்ணெய்

ரூ.5085 (பேரல்)

ரூ.5085 (பேரல்)

கச்சா எண்ணெய் + Ocean Freight செலவு

ரூ.5700 (பேரல்)

ரூ.5700 (பேரல்)

கச்சா எண்ணெய் விலை ஒரு லிட்டருக்கு ( 1 பேரல்= 159லி )

ரூ.35.89

(5700/159)

 

ரூ.35.89

சுத்திகரிப்பு வரை ஆகும் தொகை (Entry Tax, Refinery Processing, OMC Margin, Freight Cost)

ரூ.3.45

ரூ.7.14

சுத்திகரிப்புக்கு பின் அடிப்படை விலை

ரூ.39.34

ரூ.43.03

மத்திய அரசின் வரிகள்

(கலால் வரி, சாலை செஸ்)

ரூ.19.48

ரூ.15.33

பெட்ரோல் பங்க் டீலர்கள் கமிஷன்

ரூ.3.63

ரூ2.53

வாட் வரிக்கு முன்பு விலை

ரூ62.45

ரூ60.89

வாட் வரி

 

ரூ16.86

(27 சதவீதம்)

62.45*27 / 100

ரூ.10.45 (16.75 சதவீதம் + சுற்றுச்சூழல் செஸ் 25p)

60.89*16.75 / 100 =10.99

10.99 +0.25 = 10.45

விற்பனைக்கு வரும் போது

ரூ79.31

ரூ71.34

2016ம் ஆண்டு டெல்லியில் பெட்ரோல் விலை 60 ரூபாய் என்ற அளவில் தான் இருந்தது. 

இதில் வாட் வரி மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். இதில், நாட்டிலே மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிக வாட் வரி நிர்ணயிக்கிறது. 39 சதவீதம் வாட் வரி. இதற்கு அடுத்து மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம் 36 சதவீதம் வாட் வரி விதிக்கிறார்கள். பஞ்சாப் 35, தெலுங்கானா 33, தமிழ்நாடு 32, கர்நாடகா 32, அசாம் 31 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. 

        

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close