[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

டாலர் உயருது.. பெட்ரோலும் உயருது - அமைச்சர் விளக்கம்

fuel-price-hike-due-to-int-l-factors-dharmendra-pradhan

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிக அளவில் உயர்ந்து வருகிறது. நடுத்தர மக்கள் மிக அதிக அளவில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்த பிறகு பைசா பைசாவாக எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த ஆரம்பித்தன. கச்சா எண்ணெய் விலை சரிந்த போதும் கூட, பெட்ரோல் விலை மிக உயர்வாகவே இருந்தது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. 

பெட்ரோல் விலை ஒருபக்கம் உயர, மறுபக்கம் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது, மக்கள் கஷ்டப்படுவது உண்மைதான், பெட்ரோல் , டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதே சரியாக இருக்கும் ஆனால் மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதான் “ பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் சில நாடுகளில் அரசியல் சூழல் சரியாக இல்லை, தேவைக்கு ஏற்ப அவர்களால் கச்சா எண்ணெய் எடுக்க முடியவில்லை, இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் எல்லாம் சேர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தினால் நிலைமையை சமாளிக்க உதவியாக இருக்கும்” என்றார். எப்போதும் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு என்பார்கள் , இம்முறை அது டாலருக்கு மாறியிருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close