[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

காயம் குணமாகவில்லை: மீன் விற்று படிக்கும் மாணவிக்காக ஷூட்டிங் கேன்சல்!

hanan-to-be-back-on-feet-soon

கேரளாவில் மீன் விற்று கல்லுாரியில் படித்து வரும் ஹனன் ஹமீதின் காயம் குணமாகாததால் அவருக்கான சினிமா படப்பிடிப்புத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், அங்குள்ள கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளைச் சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்பனை செய்து வந்தார். இவர் பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

இருந்தாலும் தன்னை பிரபலப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. அவரை அவதூறாக விமர்சித்த வர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள் வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராகவும் அவர் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், கடந்த வாரம் பங்கேற்றார் ஹனன். நிகழ்ச்சி முடிந் து திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, கொடுங்கல்லுார் என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயம் குணமாகாததால் ஹனன் நடிக்க வேண்டிய படத்தின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள் ளது.  

இதுபற்றி ஹனன்  கூறும்போது, ‘இப்போது என் கால்களையும் கைகளையும் அசைக்க முடிகிறது. ஆனால் காயம் இன்னும் ஆற வேண்டியிருக் கிறது. சில இணையதளங்களில் எனக்கு பக்கவாதம் ஏற்பட்டு விட்டதாக தவறாக எழுதியுள்ளனர். எனக்கு முதுகு மற்றும் கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட் டாலும் என்னால் மெதுவாக நடக்க முடிந்தது. இப்போது குணமடைந்து வருகிறேன். விரைவில் என இயல்பான வாழ்க்கையை தொடர் வேன்’ என்றார்.

மருத்துவர்கள் கூறும்போது, ஹனன், சரியாக நடக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும் அதற்கு பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படு வார் என்றும் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close