[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை: லாலு பிரசாத் புகார்

barking-dogs-keep-me-up-said-jailed-lalu-yadav-hospital-s-response

ராஞ்சி மருத்துவமனையில் நாய்த் தொல்லை மற்றும் துர்நாற்றத்தால் அவதிப்படுவதாக பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாலுவுக்கு ரத்தத் தொற்று, நீரிழிவு மற்றும் வேறுசில நோய்கள் உள்ளதால், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில், தெரு நாய்கள் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும், கழிவறையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் சிரமத்துக்குள்ளாவதாக ரிம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் கொசுத் தொல்லையால் அவதிப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பணம் செலுத்திச் சிகிச்சை பெறும் வார்டுக்குத் தம்மை மாற்றவேண்டும் என லாலு பிரசாத் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close