[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

டாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..! - முழு விவரம்

people-per-doctor-survey-state-vice-in-india

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இதில் சுமார் 6 கோடிக்கும் மேற்பட்டோர் சர்க்கை நோய் பாதிப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். இதுதவிர மற்ற வியாதிகளால் அன்றாட சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் சில கோடிகளில் உள்ளது. இத்தகைய மக்கள் நெருக்கடி கொண்ட நாடான இந்தியாவில் போதுமான மருத்துவ சிகிச்சை என்பது முறையாக கிடைக்கிறதா? போதுமான மருத்துவர்கள் உள்ளனரா? என்றால் அது பல கேள்விகளை எழுப்புகின்றன. 

இந்த விவகாரத்தில் தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது. இந்தியாவிலேயே மக்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மருத்துவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 253 மக்களுக்கு 1 மருத்துவர் என்ற முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு அடுத்த இடத்தில் 334 மக்களுக்கு சிகிச்சை அளிக்க 1 மருத்துவர் என இரண்டாம் இடத்தில் டெல்லி உள்ளது. 

507 மக்களுக்கு 1 மருத்துவர் மற்றும் 535 மக்களுக்கு 1 மருத்துவர் என சிகிச்சை அளிக்கும் வகையில் 3 மற்றும் 4ஆம் இடங்களில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளன. இந்தியாவிலேயே அதிக மக்களுக்கு குறைந்த மருத்துவர்கள் என இருக்கும் மாநிலம் ஜார்க்கண்ட்தான். இதுவே மக்கள் விகிதத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கு மருத்துவர்கள் எண்ணிக்கைப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 8,180 மக்களுக்கு 1 மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார். 

மாநிலம்                                                                                ஒரு மருத்துவர் சிகிச்சை         
                                                                                          அளிக்கும் மக்கள் எண்ணிக்கை             

தமிழ்நாடு                                                                                                253

டெல்லி                                                                                                    334

கர்நாடகா                                                                                                 507

கேரளா                                                                                                     535

கோவா                                                                                                     713

பஞ்சாப்                                                                                                    789

ஹிமாச்சல பிரதேசம்                                                                       3,124

பீகார்                                                                                                      3,207

உத்தரப்பிரதேசம்                                                                               3,767

சத்தீஷ்கர்                                                                                             4,338

ஹரியானா                                                                                          6,037

ஜார்க்கண்ட்                                                                                         8,180  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close