[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு சலுகை கிடையாது: உச்சநீதிமன்றம்

no-concession-for-neet-students-who-written-neet-in-tamil-sc

வினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பில் குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, 49 வினாக்களுக்கு, 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.ஏ, பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ படிப்புகள் ஆங்கில மொழியில் உள்ள நிலையில், ஆங்கிலம் தெரியவில்லை என்றால் மாணவர்கள் எப்படி மருத்துவம் படிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பினார். மருத்துவப் படிப்புகள் ஆங்கில மொழியில் உள்ள நிலையில், நீட் தேர்வை மட்டும் பிற மாநில மொழிகளில் நடத்துவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கமளித்த சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலேயே நீட் தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தனர். சிபிஎஸ்இ தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close