[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

கலெக்டருக்கு அபராதத்துடன் ஜெயில் தண்டனை வழங்கிய நீதிபதி..!

ias-officer-gets-30-days-in-jail-for-getting-man-arrested-unlawfully

ஓய்வுபெற்ற அரசு ஊழியரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பூச்சையா. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் ஒன்று கட்டியுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ள சிலபேர் பூச்சையா சட்டத்திற்கு புறம்பாக திருமண மண்டபம் கட்டுவதாக கூறி இணை ஆட்சியர் சிவகுமார் நாயுடுவிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி திருமண மண்டபத்தின் கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்து இணை ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை நாடினார் பூச்சையா. அங்கு அவருக்கு வெற்றி கிடைத்தது. ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து   2017 ஆகஸ்ட் 29-ஆம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்சியர் சிவகுமார் நாயுடு, உள்ளூர் ஆய்வாளர் மூலம் பூச்சையாவை 2 மாதம் 29 நாட்களுக்கு சிறைக்கு அனுப்பினார்.

இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த பூச்சையா இணை ஆட்சியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இணை ஆட்சியரின் நடவடிக்கை பழிவாங்கும் நோக்கத்தோடு இருப்பது மட்டுமில்லாமல் நீதிமன்ற தீர்ப்பதையும் அவமதிப்பாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இணை ஆட்சியரின் செயல் பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக கூறி 30 நாட்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும் 2,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் இணை ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதுதவிர சட்டத்திற்கு புறம்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டதால் தெலங்கானா அரசு அவருக்கு ரூபாய் 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close