[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம்

kerala-floods-uae-says-nothing-official-yet-no-amount-of-financial-aid-announced

கேரளா மாநிலம் கடும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அண்டை மாநிலங்களும் பல்வேறு உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகிறது. இது தவிர நடிகர்கள், பொதுமக்கள் என பல தரப்பில் இருந்தும் உதவிக்கரம் நீண்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்குவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

இதையடுத்து கேரளாவுக்கு வெளிநாட்டு அரசுகள் வழங்கும் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்க வாய்ப்பில்லை என்றும், சொந்த முயற்சியாகவே நிவாரணப்பணி மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முயற்சி எடுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. எனினும் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி ரூபாய் நிதி அளிப்பதாக செய்தி மட்டும் பரவியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 30 லட்சம் இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, 2016ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்றுக்கொள்ளலாம் என பினராயிவிஜயன் தெரிவித்தார். மற்ற நாடுகள் நல்லெண்ணத்தில் தரும் நிதியை ஏற்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் தரும் ரூ.700 கோடியை, மத்திய அரசு வேண்டாம் என தடுப்பது போல, சமூக வலைத்தளங்களில் பரப்பட்டது.

இந்நிலையில் ரூ.700 கோடி தருவதாக ஐக்கிய அரசு அமீரகம் எந்த முடிவும் எடுக்கவில்லை என அதன் தூதர் அமகது அல்பன்னா தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நிதித்தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்று, அதுதொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close