[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

வதந்திகளை தொடங்குவது யார்? - ஆராய வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு கோரிக்கை

whatsapp-to-clamp-down-on-sinister-messages-in-india-it-minister

வதந்திகள் எங்கிருந்து பரப்பப்படுகின்றன என்பது குறித்த தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்த வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் வாட்ஸ் அப் மூலம் வதந்திகள் பரவுவது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை கடத்த வந்ததாக கூறி அப்பாவிகளை தாக்குவது, பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. வாட்ஸ் அப் மூலமே பெரும்பாலும் வதந்திகள் பரப்பப்படுவதாக புகார் எழுந்தது. இதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் வாட்ஸ் அப் பயன்பாடு கடந்த 2 ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது.

      

இதனையடுத்து, வதந்திகளை பரப்ப அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப்  நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. வதந்தி பரவுவதை தடுத்து நிறுத்தாமல் இருந்தால் அதற்கு துணை போனதாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், வதந்தியான தகவல்களை ஆராய்ந்து அதன் தொடக்கத்தை கண்டறிய உள்நாட்டு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி குறைதீர்ப்பு அதிகாரியை வாட்சப் நியமிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப் தலைவர் கிறிஸ் டேனியல்ஸ்-ஐ டெல்லியில் இன்று சந்தித்த பின் அமைச்சர் இதனை தெரிவித்தார். வாட்ஸ் அப்பினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் குற்றங்களுக்கும் அது அடித்தளம் அமைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எனினும் இதற்கு தீர்வு காண்பதன் அவசியத்தை வாட்ஸ் அப் நிறுவனம் உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close