[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

கண்ணீர் வெள்ளத்தில் மக்கள் இருக்க... ஆதாரமற்ற செய்திகளை ஷேர் செய்வது நியாயமா..?

did-ronaldo-donate-in-kerala-flood-donation-viral-test

கேரளாவில் மக்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் ஏராளமான தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இப்படியொரு மழை எப்படி பெய்தது என்று வானியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள். இப்படியொரு பேரிடர் வரும் என கேரள மக்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தங்கள் வீடுகளை, உடைமைகளை, ரத்த உறவுகளை இழந்து அவர்கள் துன்பக் கடலில் மூழ்கியுள்ளார்கள். பெருமழையில் மிகப்பெரிய வீடுகளும் சரிந்து விழுந்த காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது. 

மீளாத் துயரில் சிக்கிக் கொண்ட கேரள மக்களை காக்க பல்வேறு தரப்பினரும் தங்களது கரங்களை நீட்டினார்கள். கேரள மக்களும் தங்களை தாங்களே காத்துக் கொள்ள களத்தில் இறங்கினார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மீட்பு பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். 

Read Aslo -> கேரளாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு

                

இப்படி, மக்கள் மீளாத் துயரில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பலரும் போலியான செய்திகளை பரப்பி வருகின்றார்கள். சமூக வலைதளங்களில் இந்த போலியான செய்திகளின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மை தன்மையை சோதிக்காமல் பலரும் அதனை ஷேர் செய்துவிடுகிறார்கள். போலியான செய்திகள் மின்னல் வேகத்தில் பரவி விடுகின்றது. பின்னர் போலியான செய்திகளுக்கு சிலர் மறுப்பு செய்திகளையும் வெளியிடுகிறார்கள். இரண்டுமே சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. எல்லோருக்கும் உண்மையான செய்தி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 

Read Also -> கேரள வெள்ள பாதிப்பு : திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் நிதியுதவி 

        

கேரள வெள்ள பாதிப்பையொட்டி கடந்த சில நாட்களாக பல்வேறு போலியான செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில், சமீபத்தில் வெளியான ஒன்று, கேரளாவுக்கு நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.77 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்தி வெளியானதுதான். ஆனால், இந்த செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

                   

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரொனால்டோ இதற்கு முன்பு பல்வேறு விஷயங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார். அதற்காக மனிதாபிமானம் மிக்க வீரர் என்ற விருது கூட அவர் பெற்றுள்ளார். அதேபோல், கேரளாவில் கால்பந்தாட்டத்திற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ரொனால்டோவுக்கு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இதனால், ஏதோ ஒரு வகையில் இதுபோன்ற செய்திகளை சிலர் நம்பிவிடவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது போலியான செய்தி.

              

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ஆனால், இதற்கு முன்பாகவே நடிகர் விஜய் இவ்வளவு நிதியுதவி அளித்தார் என பல செய்திகள் சமூக வலைதளங்களில் சில தினங்களாகவே பரவி வந்தது. ஆனால், இன்றுதான் நடிகர் விஜய் நிதியுதவி அளித்தது தொடர்பாக அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது. 

Read Also -> கேரளாவுக்கு ரூ.70 லட்சம் நிதி அளித்தார் நடிகர் விஜய்

மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் வேளையில் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானதாக உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close