[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்: நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி

pm-modi-visit-kerala-tomorrow

கேரள மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் வரலாறு காணாத கனமழைக்கு உயிரிழந்தோர்‌ எண்ணிக்கை 100 -ஐ நெருங்கியுள்ளது. கேரளாவின் வெள்ள பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிட உள்ளார்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழைக்கு வியாழனன்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை சுற்றிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் காட்டாற்றில் அடித்து செல்லப்பட்டன. திருச்சூர், ஆலுவா, மூவாட்டுபுழா ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் விமான ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பல ‌இடங்களில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி விமான நிலையம் வெள்ளக்‌காடாக காட்சியளிக்கிறது. சிறிய ரக விமானங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்க கூடுதலாக 23 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 200-க்கும் அதிகமான படகுகளும் இந்த மீட்புப் பணியில் இணைய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கேரளாவின் வெள்ள பாதிப்புகளை நாளை பிரதமர் மோடி பார்வையிடவுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close