[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

செவிலியர் லினியை ஞாபகம் இருக்கா..? கணவரின் பாராட்டத்தக்க செயல்..!

nurse-lini-s-husband-donates-first-salary-to-kerala-flood-victims

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கத்தின்போது அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு உயிரிழந்த லினியின் கணவர்  அரசு வேலையில் தனது முதல் மாத சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாக்கிய நிபா வைரஸை எவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலரும் உயிரிழந்தனர். அதில் ஒருவர் தான் செவிலியர் லினி. நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களை கவனித்து வந்த அவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டது. யாருக்கும் அதன்மூலம் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக செவிலியர் லினி தனது கணவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ நான் கிட்டத்தட்ட இவ்வுலகை விட்டு செல்கிறேன். மறுபடியும் உன்னை சந்திக்க முடியுமா..? என்பது தெரியவில்லை. நம் குழந்தைகளையும் உன்னோடு அழைத்துக் கொண்டு சென்றுவிடு. அவர்களையும் தனிமையில் விட்டுவிட்டு செல்லாதே” என உருக்கமாக எழுதியிருந்தார்.

செவிலியர் லினியின் அர்ப்பணிப்பு உணவு பலரையும் வியக்க வைத்து. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தனக்கு கொடுத்த பணியை அவர் சிறப்பாக செய்திருந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில், லினியின் மறைவுக்கு மிகுந்த வேதனையோடு இரங்கல் தெரிவித்திருந்தார். அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு உயிரிழந்த லினியின் கணவர் சஜிஷ்க்கு அரசாங்க வேலை வழங்கப்பட்டது. தற்போது கேரள மாநில பொது சுகாதார மையத்தில் பணிபுரிந்து வரும் சஜிஷ் தனது முதல் மாத அரசு சம்பளத்தை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்கு அளித்துள்ளார். மனைவியின் விருப்பப்படி தன் இரு குழந்தைகளுடன் கேரளாவில் வசித்து வரும் சஜிஷ், முதல் மாத சம்பளத்தை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தொழிலாளர் மற்றும் கலால் அமைச்சரான டிபி ராமகிருஷ்ணனை சந்தித்து அதற்கான காசோலையை வழங்கியுள்ளார் சஜிஷ்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் மழை தொடர்ச்சியாக பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close