[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

உடையை இரவல் வாங்கிய இம்ரான் கான்

pakistan-s-prime-minister-in-waiting-imran-khan-borrows-waistcoat-for-official-photo-in-parliament

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியரின் உடையை இரவல் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப்  கட்சி, வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. மற்ற கட்சிகளுடன் இணைந்து  இம்ரான் கான் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் பிரதமராக வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இம்ரான் கான் பதவியேற்க உள்ளார்.

             

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு அந்நாட்டு நாடாளுமன்றம் முதன்முறையாக நேற்று கூடியது. அதற்கு முன்னதாக எம்பிக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கப்பட்டது. அச்சமயத்தில் இம்ரான் கான் கோட் அணிந்திருக்கவில்லை. அதனால் நாடாளுமன்ற ஊழியர் ஒருவரின் கோட்டை இரவலாக பெற்று இம்ரான் கான் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close