[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சில நாட்களுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்- தேவஸம் போர்டு

kerala-continues-to-reel-under-floods-colossal-damage-to-tourism-and-plantation-sectors

கேரளாவில் கனமழையால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். தண்ணீரில் மூழ்கிய வீடுகள், மூழ்கிப் போன பயிர்கள், சுற்றுலாத்துறையில் பின்னடைவு என அம்மாநிலத்தில் பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழையைதொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்றைய தினமும் பல்வேறு இடங்களில் பெய்த மழை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.அதேவேளையில் இந்த பருவமழையால், 187 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய அவசரநிலை செயல்பாட்டு மையம் கூறியுள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. உடைமைகளை இழந்து மக்கள் தவிக்கின்றனர்.

கனமழையால் கேரள மாநிலத்தின் பொருளாதாரமும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, மூணாறு உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தளங்களில் விடுதிகளில் செய்யப்பட்ட முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 26 ஆயிரத்து 400 ஹெக்டேர் அளவிற்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக தேயிலை, காப்பி, ரப்பர் உள்ளிட்ட விவசாயத்தில் மட்டும் 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநிலம் பம்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சில நாட்களுக்கு சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்கள்  கடலுக்குள் மீன்பிடிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close