[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..!

karnataka-couple-stream-wedding-live-on-fb-as-safety-net-as-parents-oppose

பெற்றோர்கள் தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இளம் தம்பதிகள் தங்களது திருமணத்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் கிரண் குமார். இவருக்கும் அஞ்சனாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டுள்ளது. தற்போது அஞ்சனா பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். முதலில் நண்பர்களாக இருந்த அவர்கள் நாளடவவில் தங்களது இன்ப துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இதனால் அவர்களுக்குள் அன்பு அதிகமானது. அதேபோல் வாட்ஸப்பிலும் தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இணைந்து வாழ முடிவு செய்தனர். ஆனால் தனது திருமணத்திற்கு பெற்றோர்கள் எப்படியும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என அஞ்சனாவிற்கு தெரியும். காரணம் கிரண் குமார் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர். இருந்தாலும் பெற்றோர் மீது அதிக அன்பு வைத்திருந்த அஞ்சனா, தனது காதலை தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம் என்றும் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அஞ்சனாவின் பெற்றோர், எப்படியாவது தனது மகளை கிரண் குமாரிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி தனது மகள் அஞ்சனாவை வைத்தே கிரண் குமாருக்கு எதிராக போலீசாரிடம் போலி புகார் அளிக்கவும் முடிவு செய்து அதற்கான முயற்சியையும் மேற்கொண்டார். இதனையடுத்து வீட்டை விட்டு தனது காதலனுடன் வெளியேறினார் அஞ்சனா. இதனையடுத்து தனது மகளை கிரண் குமார் கடத்தி சென்றுவிட்டதாக அஞ்சனாவின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தங்களது திருமணத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி அதனை பேஸ்புக்கில் லைவ் வீடியோகவும் வெளியிட்டுள்ளார் அஞ்சனா. தன்னை யாரும் கடத்தி செல்லவில்லை என்றும் தான் விருப்பப்பட்டே கிரண் குமாரை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். யாராவது தங்களை பிரிக்க முயற்சித்தால் நாங்களே மடிந்துவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். அஞ்சான மேஜர். எனவே அவரின் வாக்குமூலத்தை வைத்து, கிரண்குமாருக்கு எதிராக அஞ்சனாவின் தந்தை கொடுத்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close