[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

கேரளாவில் தொடரும் மழை: வெள்ளம், மழைச்சரிவுக்கு 37 பேர் பலி!

kerala-floods-live-updates-death-toll-rises-to-37

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மத்திய மற்றும் வடக்கு பகுதிகள் வெள்ளத்தின் பிடியில் தத்தளித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 36 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 22 அணைகளில் நீர் முழு வீச்சில் வெளியேறுவதால் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. முப்படை வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 8 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற வானிலை மையத்தின் எச்சரிக்கையால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

 இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், வீடு மற்றும் நிலங்களை இழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ள பினராயி விஜயன், பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் மாநில அரசு சார்பில் ஒரு கோடி நிவாரண நிதி அளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை புதுச்சேரி மக்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close