[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்
  • BREAKING-NEWS இன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு
  • BREAKING-NEWS மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

condolence-for-karunanidhi-in-parliament

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். தற்போது ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே கருணாநிதி உடலை மெரினாவில் அடக்க செய்ய நிலம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பை வாசித்தனர். அப்போது எம்.பி.க்கள் அனைவரும் மௌனமாக எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close