[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

பாஜகவுக்கு எதிராக எங்களால் ஒன்றிணைய முடியும்: சரத் பவார்

sonia-gandhi-deve-gowda-and-i-can-unite-opposition-sharad-pawar

பாரதிய ஜனதாவுக்கு எதிராக சோனியா காந்தி, தேவ கவுடா மற்றும் தன்னால் ஒன்றிணைய முடியும் என சரத் பவார் கூறியுள்ளர்.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் இப்போதே தேர்தல் வியூகங்களை ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி சந்திக்க உள்ள முதல் நாடாளுமன்றத் தேர்தல். எனவே தேர்தலில் வெற்றி பெற அவர் பல்வேறு முயற்சி எடுப்பார். அதேசமயம் பாஜகவும் தங்களது சாதனைகளை மக்களிடம் சொல்லி ஆட்சியை தக்க வைக்க முயலும்.

இந்நிலையில் சோனியா காந்தி, தேவ கவுடா மற்றும் தன்னால் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளர். மூவருக்கும் பிரதமராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என தெரிவித்த அவர், பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும் என தெரிவித்தார்.

பேட்டி ஒன்றில் பேசிய அவர், நாட்டின் தற்போதையை அரசியல் சூழ்நிலையை 1975-77 ஆம் ஆண்டு கால அரசியல் சூழ்நிலைகளோடு ஒப்பிட்டு பேசினார். இந்திரா காந்திக்கு எதிராக அப்போது பலர் இருந்ததை போல தற்போது பிரதமர் மோடிக்கு எதிராக இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். மேலும் எதிர்க்கட்சிகளின் கவனம் என்பது தேசிய அளவிலான கூட்டணிக்கு பதிலாக மாநில அளவிலான கூட்டணியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும் சரத் பவாரின் கருத்துக்கு பாஜக சார்பில் இன்னும் மறுகருத்து தெரிவிக்கப்படவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close